மணத்தக்காளி கீரை
மணத்தக்காளி கீரை விலை குறைந்ததும், அதிக சத்து கொண்டதுமான கீரைகள் தங்கத்திற்கு ஒப்பானவை. கீரை வகையைச் சேர்ந்த மணத்தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. மிளகு தக்காளி மற்றும் மணல் தக்காளி என்ற பெயர்களால் அழைக்கப்படும் மணத்தக்காளி கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் காணப்படுகின்றன. இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள மணத்தக்காளி இதயத்துக்கு பலம் ஊட்டும் டானிக்காக பயன்படுகின்றன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் ‘பி’ குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன. கரோட்டின்கள், வைட்டமின், குளுக்கோஸ், டோமட்டினால்,டைகோஜெனின், சோலமார்ஜைன், பால்மிடிக், சிட்ரிக் அமிலங்கள், சோலனோகேல்ஸைன் போன்ற வேதிப்பொருட்கள் மணத்தக்காளியில் காணப்படுகின்றன. இதயநோய்க்கு மருந்து: கத்தரி இனத்தைச் சேர்ந்த ...