விவசாய கேள்வி - பதில்கள்...!
விவசாய கேள்வி - பதில்கள்...! ❓ சிப்பிக்காளானுக்கு எப்பொழுதெல்லாம் தண்ணீர் தளிக்க வேண்டும்? 🍄 சிப்பிக்காளான் வளர்ப்பில் ஒரு நாளைக்கு 4 முறை குளிர்ந்த நீரை காளான் பைகளில் தளிக்க வேண்டும் (ஸ்ப்ரே செய்யவும்). காளான் வித்துகள் உலர்ந்திருக்கும் போதெல்லாம் தண்ணீர் தளிக்க வேண்டும். 🍄 10 நாள் முதல் 15 நாட்களுக்குள் சிப்பிக்காளான் கொத்து கொத்தாக வளர்ந்த நிலையில் தினசரி சிறிது தண்ணீர் மட்டும் தௌpத்து வர வேண்டும். ❓ கரும்பு வயலுக்கு எப்பொழுது உரம் இட வேண்டும்? 🌴 நடவு செய்து 80-ம் நாளில் 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கை ஒவ்வொரு கரும்புப் பயிரின் வேர்ப்பகுதியிலும் ஒரு கையளவு சரிசமமாகப் பகிர்ந்து வைத்து, பாசனம் செய்ய வேண்டும். இதனால் கரும்பைத் தாக்கும் நு}ற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். 🌴 நடவு செய்த 90 நாட்களுக்கு பிறகு கடலைப்பிண்ணாக்கு 100 கிலோ, ஆமணக்குப் பிண்ணாக்கு 200 கிலோ ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு பயிரின் தூரிலும் ஒரு கையளவு பகிர்ந்து வைத்து மண் அணைக்க வேண்டும். ❓ நெல் விதைநேர்த்தி எவ்வாறு செய்வது? 🌾 ஆட்டூட்டக்கரைசல் அல்லது பஞ்சகாவ்யா கலவையை 300 மில்லி என்ற அளவில் 10 லிட்டர் நீரில் க...