விவசாய கேள்வி - பதில்கள்...!

 விவசாய கேள்வி - பதில்கள்...! 


❓ சிப்பிக்காளானுக்கு எப்பொழுதெல்லாம் தண்ணீர் தளிக்க வேண்டும்?


🍄 சிப்பிக்காளான் வளர்ப்பில் ஒரு நாளைக்கு 4 முறை குளிர்ந்த நீரை காளான் பைகளில் தளிக்க வேண்டும் (ஸ்ப்ரே செய்யவும்). காளான் வித்துகள் உலர்ந்திருக்கும் போதெல்லாம் தண்ணீர் தளிக்க வேண்டும்.


🍄 10 நாள் முதல் 15 நாட்களுக்குள் சிப்பிக்காளான் கொத்து கொத்தாக வளர்ந்த நிலையில் தினசரி சிறிது தண்ணீர் மட்டும் தௌpத்து வர வேண்டும்.


❓ கரும்பு வயலுக்கு எப்பொழுது உரம் இட வேண்டும்?


🌴 நடவு செய்து 80-ம் நாளில் 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கை ஒவ்வொரு கரும்புப் பயிரின் வேர்ப்பகுதியிலும் ஒரு கையளவு சரிசமமாகப் பகிர்ந்து வைத்து, பாசனம் செய்ய வேண்டும். இதனால் கரும்பைத் தாக்கும் நு}ற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.


🌴 நடவு செய்த 90 நாட்களுக்கு பிறகு கடலைப்பிண்ணாக்கு 100 கிலோ, ஆமணக்குப் பிண்ணாக்கு 200 கிலோ ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு பயிரின் தூரிலும் ஒரு கையளவு பகிர்ந்து வைத்து மண் அணைக்க வேண்டும்.


❓ நெல் விதைநேர்த்தி எவ்வாறு செய்வது?


🌾 ஆட்டூட்டக்கரைசல் அல்லது பஞ்சகாவ்யா கலவையை 300 மில்லி என்ற அளவில் 10 லிட்டர் நீரில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.


🌾 நெல் மற்றும் அலுத்னமான தோலுடைய விதைகளை ஒரு நாள் முழுவதும்  ஊற வைத்து விதை நேர்த்தி செய்தபின் விதைக்க வேண்டும்.


❓ முருங்கை விதையை எவ்வாறு சேகரித்து வைப்பது?


🎋 முருங்கை விதை எடுக்கும்போது விதைக்கான காய்களை செடியிலேயே நன்கு முற்ற வைக்க வேண்டும். பிஞ்சு விதைகளை நீக்கி விட்டு நன்கு முற்றிய விதைகளை மட்டும் 2 மணி நேரம் வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 


🎋 இந்த விதைகளை பாலித்தீன் பைகளில் போட்டு ஒரு கிலோ விதைக்கு 15 கிராம் வசம்புத் தூள், தலா 20 கிராம் நன்கு காய்ந்த நொச்சி இலை, வேப்பிலை கலந்து நன்கு கிளறி விட்டு, காற்று புகாதபடி கட்டி வைக்க வேண்டும். இவ்வாறு சேமித்த விதைகளை ஒரு ஆண்டு வரை வைத்திருந்து விதைப்புக்கு பயன்படுத்தலாம்.


❓ வெள்ளாடுகளில் பேன்களை எப்படி கட்டுப்படுத்துவது?


🐐 வெள்ளாடுகளில் வாழும் பேன்கள் ஆடுகளை மட்டுமே தாக்கக் கூடியவை.


🐐 கட்டுப்படுத்துதல் கடினம். முட்டையிட்டு 8-12 நாட்கள் கழித்தே குஞ்சு பொரிப்பதால் கால்நடை மாருந்தகங்களில் கிடைக்கும் பேன் கட்டுப்பாட்டு மருந்துகளை முதல் முறை அடித்த பிறகு, சில நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாவது முறை அடிப்பதும் அவசியம்.





Comments

Popular posts from this blog

கொடிவேரி, பவானிசாகர் அணை | Kodiveri, Bhavanisagar Dam

Most Beautiful Mountains Around the World