தமிழக சுற்றுலா களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் !!

அழகிய பூங்காக்கள், அமைதியான பள்ளத்தாக்குகள், அடர்ந்த சோலைகள், ஆன்மிக கோவில்கள், குளு குளு மலைப்பிரதேசங்கள், ஈர்க்கும் வனவிலங்கு சரணாலயங்கள், கண்களுக்கினிய கடற்கரைகள் என மேலும் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களின் அனைத்து சிறப்புகளையும் அறிந்து கொள்ள..
Bright zoom Natural
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் !!
🐅 களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் என்பது தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 895 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தியாவின் 17வது புலிகள் காப்பகமாகும்.
🐅 பல்லுயிர்ப் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இங்கு புலி, சிறுத்தை, மான், கடமான், யானை போன்ற அரிய வகை விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் காண இயலாத தாவர வகைகள் மற்றும் ஆயிரக்கணக்கான மூலிகை வகைகள் உள்ளன. உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தை தரக்கூடிய இடங்களில் அற்புதமாக விளங்கும் முண்டந்துறை புலிகள் சரணாலயம் சென்று வந்தாலே புத்துணர்வு ஏற்படுவது இயற்கை. மேலும் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய காப்பகமாக முண்டந்துறை திகழ்கிறது.
தோற்றம் :
🐅 1962 ஆம் ஆண்டு, களக்காடு புலிகள் சரணாலயமும், முண்டந்துறை புலிகள் சரணாலயமும் உருவாக்கப்பட்டன. 1988 ஆம் ஆண்டில், இந்த இரு சரணாலயங்களையும் ஒன்றிணைந்துறை இக்காப்பகம் உருவாக்கப்பட்டது.
🐅 1996 ஆம் ஆண்டு, இக்காப்பகத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தினை ஒட்டியுள்ள வீரப்புலி, கீழமலை ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்களிலுள்ள குறிப்பிட்ட பகுதிகளை இணைக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு இக்காப்பகத்தின் 400 சதுர கி.மீ. முக்கிய பகுதியை, இந்தியாவின் தேசிய பு+ங்கா பகுதிகளுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
சிறப்புகள் :
🐅 இக்காப்பகத்தின் வடக்கு, தெற்கு, மேற்கு திசைப்பகுதிகள் வனங்களால் சு+ழப்பட்டுள்ளது.
🐅 இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, சிங்கவால் குரங்கு போன்றவை மிகுதியாக வாழ்கின்றன. காடுகளை பாதுகாப்பதற்காக 228 கிராம வனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
🐅 மிருகங்களைத் தவிர இந்த சரணாலயத்தில் ஈர்க்கப்படும் மற்றொரு விஷயம் மலைகள் மற்றும் காட்டுப் பாதைகளில் நடை பயணம் செய்ய 24 விதமான பாதைகள் உள்ளன.
🐅 புலிகளைக் காப்பதில் மக்களுடன் கூடிய வனப்பாதுகாப்புத் திட்டமான சு+ழல் மேம்பாட்டு திட்டம், கடந்த 1995 ஆம் ஆண்டு உலக வங்கியினால் தொடங்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக, இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
🐅 மக்களுடன் ஒருங்கிணைந்து காடுகள் பாதுகாப்பில் முக்கிய பணியாற்றியதற்காக, இக்காப்பகத்திற்கு தேசிய புலிகள் ஆணையத்தின் சிறந்த விருது கிடைத்துள்ளது.
🐅 ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை என்ற பாடல், இங்குள்ள பாணதீர்த்தம் அருவியில் எடுக்கப்பட்டதாகும்.
சுற்றுலா :
🐅 மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள அடர்ந்த வனத்தின் நடுவில் ஓடும் பாபநாசம் அணை, பாணதீர்த்த அருவி, சேர்வலாறு அணை, அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி ஆகிய நீர் வீழ்ச்சிகளும், பாண்டியன் கோட்டை, சொரிமுத்து அய்யனார் கோயில் உள்பட பல சுற்றுலாத் தலங்களும் அமைந்துள்ளது.
🐅 காட்டுக்குள் தங்குவதற்கு தமிழ்நாடு வனத்துறை விருந்தினர் மாளிகை மற்றும் அருகில் அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் போன்றவை காணப்படுகிறது.
இணைய சேவை :
🐅 களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் குறித்த அனைத்துத் தகவல்களையும் .
என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளை கொண்டுள்ளது.
அமைவிடம் :
🚉 தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும், குற்றாலத்திலிருந்து 75 கி.மீ. தொலைவிலும் முண்டந்துறை அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் அம்பாசமுத்திரம் ஆகும். இது 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
🐅 சுற்றுச்சசுற்றுச்சூம் வன உயிரின ஆர்வலர்களுக்கு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஒரு இரசிக்கதக்க இடமாக திகழ்கிறது.

Comments
Post a Comment