வேளாண் டிப்ஸ் Agricultural Tips
வேளாண் டிப்ஸ்
Agricultural Tips
Bright Zoom,
◆ மலைத்தோட்டப் பயிரான தேயிலைக்கு மழை இல்லாத நாட்களில் இலைவழி தௌpப்பு மூலம் பஞ்சகாவியக் கரைசலை தௌpப்பதன் மூலம் அதிக அளவில் தேயிலைக் கொழுந்துகள் கிடைக்கும்.
◆ எள், தினை, கொண்டைக்கடலை, நிலக்கடலை, ஓமம், சு+ரியகாந்தி, எலுமிச்சை, அறுபதாம் குறுவை நெல், கருத்தக்கார் நெல், கொள்ளு, கறுப்புக் கொள்ளு, ரஸ்தாளி வாழை, நாடன் வாழை, கற்பு+ரவல்லி வாழை, தர்பு+சணி, பப்பாளி, செடிமுருங்கை, கத்திரி, மா, சின்ன வெங்காயம், புதினா, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முல்லை, குண்டுமல்லி, பட்டன் ரோஜா போன்ற பயிர்களை கார்த்திகை பட்டத்தில் பயிரிடலாம்.
◆ நெற்பயிருக்கு 1 லிட்டர் பஞ்சகாவியக் கரைசலை, 30 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்குத் தௌpப்பதன் மூலம் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதைத் தடுக்கலாம்.
◆ ஊடுபயிர் பயிரிடுவதன் மூலமும், நிலத்தை பாலித்தீன் தாள்களைக் கொண்டு மூடுவதன் மூலமும் கோரை வருவதைக் குறைக்கலாம்.
◆ கோடைக்காலம் முடிந்து, ஜூன், ஜூலை மாதங்களுக்கு மேல் மாடித்தோட்டம் அமைப்பது நல்லது.
◆ பஞ்சகாவ்ய என்பது இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நில ஊட்டப்பொருளாகும்(உரம்). இந்த அற்புதக் கரைசல் பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து முக்கிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
◆ நவதானிய பயிர்களின் வேர் முடுச்சுகளில் நிலத்திற்கு தேவையான நைட்ரஜன் சத்து அதிகம் இருப்பதால் இவற்றை நிலத்தில் விதைத்து அப்படியே உழவு செய்தால் மண்ணிற்கு இயற்கையான வழியில் தழைச்சத்தை கிடைக்க செய்யலாம்.
◆ செட்டுநீர் பாசனம் அமைப்பதன் மூலம், பயிருக்கு தேவையான தண்ணீரை கணக்கிட்டு அதைக் குழாய்கள் வழியாக வேருக்கு அருகிலேயே கிடைக்கச் செய்து பயிர் வளர்ச்சியை சீராக்கலாம்.
◆ மாடித்தோட்டத்தில் பயிர் செய்யும் பைகளை நேரடியாக தரையிலும், ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும் வைக்கக் கூடாது.
◆ நல்ல ஆரோக்கியமான ஆறு முதல் ஏழு இலைகளைக் கொண்ட தென்னை நாற்றுகளை தேர்வு செய்து நடுவது சிறந்தது.
Comments
Post a Comment