ரோஜா செடிகளை வாங்கி வளர்க்க டிப்ஸ் Buy rose plants and develop tips

ரோஜா செடிகளை வாங்கி வளர்க்க டிப்ஸ் Buy rose plants and develop tips 

Bright Zoom ,

★ நிறத்தின் அடிப்படையில் எப்பொழுதும் ரோஜா செடிகளை நடுவதற்காக தேர்வு செய்யக் கூடாது. அது என்ன ரகம், நமது மண்ணில் வளருமா, சு+ழ்நிலைக்கு ஏற்றதா, அதிகம் பு+க்கும் திறன் உடையதா என்பதை அறிந்து தேர்வு செய்ய வேண்டும்.

★ நாம் வாங்கும் ரோஜா செடி அதிக வயதுடையதாக இருக்கக் கூடாது. அந்த வகையில் செடியின் தடிமன் மொத்தமாக முற்றிய நிலையில் உள்ளதா என கவனிக்க வேண்டும். நாம் வாங்கும் செடியின் தண்டுப்பகுதி பென்சில் அளவு தடிமனாக இருந்தால் சிறந்தது. இவ்வாறு செடிகளை நாம் தேர்வு செய்தால் செடியின் ஆயுட்காலம் அதிரிப்பதுடன் நிறைய பு+க்களும் நமக்குக் கொடுக்கும். 

★  செடிகளை நாம் வாங்கிய உடனே நடவு செய்யக் கூடாது. ஏனென்றால் வாங்கி வரும் செடி நமது சு+ழ்நிலைக்கு பழக ஏதுவாக அப்படியே ஒரு சில நாட்களுக்கு வைக்க வேண்டும். 

★ மிகச் சிறிய செடியாக இருந்தால் 12 இன்ச் தொட்டியும், கொஞ்சம் பெரிய செடியாக இருந்தால் 15 இன்ச் அளவுள்ள தொட்டியை தேர்வு செய்ய வேண்டும்.

★ ரோஜா செடிக்கு சிறந்த மண் என்றால் அது செம்மண் தான். செடி வளர்க்க மண் கலவை அவசியம். அந்த வகையில் தோட்டத்து செம்மண் ஒரு பங்கு, மணல் ஒரு பங்கு, நன்கு மக்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரம் ஒரு பங்கு சேர்த்து கலந்து கலவையை தயாரிக்க வேண்டும். 

★  செடிகளை தொட்டிக்கு மாற்றும் முன் தண்ணீர் விடக் கூடாது. இதனால் செடியினை மண்ணுடன் தொட்டிக்கு மாற்றலாம். 

★  செடிகளை தொட்டிக்கு மாற்றி இரண்டு வாரத்திற்கு பிறகுதான், காலை வெயில் படும் இடத்தில் தொட்டியினை வைக்க வேண்டும்.

★  ரோஜா செடியில் பு+க்கள் அழகாக இருக்கின்றது என பறிக்காமல் செடியிலேயே விடாமல் அவ்வப்போது பறித்துவிட வேண்டும். 

★  ரோஜா செடிகளில் காய்ந்த, பழுத்த இலைகளை வெட்டி எடுத்துவிட வேண்டும். செடியின் இலைகள் அனைத்தையும் வெட்டி விடக் கூடாது. ஏனென்றால் செடிகளின் ஒளிச்சேர்க்கைக்காக மேற்பகுதியில் உள்ள துளிர் இலைகளை அப்படியே விட்டுவிட வேண்டும். 

★ புதிய செடிகளை வைத்து ஒரு மாதத்திற்கு பிறகு, நாம் தயாரிக்கும் இயற்கை உரங்களைக் கொடுக்கலாம். 

★  ரோஜா செடிகளுக்கு காலை நேரத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் நாள் முழுவதும் செடிகளுக்கு தேவையான ஈரம் அப்படியே இருக்கும். அதிகப்படியான தண்ணீர் ஊற்றாமல் செடியின் வேர் மண் நனையும் அளவிற்கு மட்டுமே நீர் ஊற்ற வேண்டும். 



Comments

Popular posts from this blog

கொடிவேரி, பவானிசாகர் அணை | Kodiveri, Bhavanisagar Dam

Most Beautiful Mountains Around the World

வஜ்ஜிரவல்லி எனும் பிரண்டையின் மகத்துவம் அறிவோம் | We know the greatness of the brand Vajjiravalli